பாரதியும் நவீன பெண்ணியவாதிகளும்

எமனுலகிலிருந்து மீண்டுவந்த
எட்டயபுரத்துப் பாரதியுடன் 
அளவளாவிக் கொண்டிருந்தேன்
“அருகே பெண்ணியம் பேசுகிறார்களாம்
வா போவோம்” உரிமையாய் அழைத்தார்
நானோ பெண்ணியமா? ஐயகோ என்றலறிட
பாரதி கண்சிவந்து மீசைதுடிக்க கேட்டார்
“என் கவிதைகளை ரசிப்பவனா நீ?”
ஐயனே!என்ன கேள்வி இது
நீயும் கண்ணதாசனும் இல்லை என்றால்
கவிதையா? கிலோ என்ன விலை 
என்றல்லவா கேட்டிருப்பேன்
“பிறகேன் பெண்ணியத்தை தவிர்க்கிறாய்?”
உண்மையை புரியவைக்க முயல்வதற்குள்
இழுத்துச் செல்லப்பட்டேன் கூட்டத்துக்குபெண்ணியம் வாழ்க ஆணாதிக்கம் ஒழிக
கோஷங்கள் எங்கும் முழங்கின
பாரதியும் மனதில் உவகை பொங்கிட 
ஆக்ரோஷமாய்க் கோஷமிட்டார்
பாரதியின் பெண்விடுதலைப் பாடல்கள்
ஒலிபெருக்கியில் முழங்கிட
பாரதியின் முகத்திலோ பெருமிதப் புன்னகை

விரிவுரை மண்டபத்தின் ஞாபகத்தில்
விரைவாக தூங்கிப் போன என்
உறக்கத்தை கலைத்து விழித்தெழ வைத்தது
உச்சஸ்தாயியில் ஒலித்த அந்த
ஆங்கிலக் கெட்ட வார்த்தை
ஆணாதிக்க எதிர்ப்பு இப்போது
ஆண் வர்க்க எதிர்ப்பாய் மாறியிருந்தது
பாரதியைத் திரும்பிப் பார்த்தேன்
பரிதாபத்துத்துக்குரியவர் போல்
தலைகுனிந்து மௌனித்திருந்தார்

பேச்சு செவிகளில் நாராசம் ஊற்றிட
மௌன விரதம் கலைப்பதற்காய்
மெல்ல எழுந்தேன் இருக்கையிலிருந்து
அத்தனை பேர் கண்களும் என்மேல்
தொண்டையை ஒருமுறை கனைத்துவிட்டு
பேசிக்கொண்டிருந்தவரிடம் கேட்டேன்
பெண்ணியம் என்றால் என்ன?
அற்பப் புழுவாய் எனை மதித்து
நக்கற் சிரிப்போடு நவின்றார்
“ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம்
அதுவே பெண்ணியத்தின் இலட்சியம்”

அப்பாவித்தனமாய் மீண்டும் கேட்டேன்
“ஆணொருவன் தன்னைத் நிந்திக்கும் பெண்ணை
நிந்திப்பதும் பால்நிலைச் சமத்துவமன்றோ?”
அத்தனை கண்களும் என்மீது
அனலைக் கக்கின-பாரதியின்
கண்களில் மட்டும் கண்ணீர்த்துளிகள்

ஆணாதிக்க வெறி பிடித்தவனே மீண்டும்
ஆங்கிலக் கெட்டவார்த்தை காதில் ரீங்காரமிட்டது
விதிர்விதிர்த்து நின்றேன் நான்
பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா?
பெருங்கூச்சலும குழப்பமும்
ஆண்கள் மட்டும் இள……
காதலைச் சொல்லப் போன ஆணைப்போல
தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டன

கைதட்டி கைதட்டியே சிவந்து போன கரங்களுடன்
என்னை அறைவதற்காய் ஓடிவந்தனர்
ஆண் அடிப்பொடிகள் சிலர்
எகிறிக் குதித்து தப்பித்து ஓடினேன்
எனக்கு முன்னால் பாரதி ஓடிக்கொண்டிருந்தார்
ஐயோ பேய்! பேய்!! என்று அலறியவாறு

(2015 ஜூனில் எழுதியது)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s